×

இலங்கையில் குண்டு வெடிப்பு தவ்கித் ஜமாத் கடும் கண்டனம்

தொண்டி, ஏப்.22: தொண்டியில் தவ்கித் ஜமாத் சார்பில் பெண்களுக்கான மார்க்கம் குறித்த இஜ்திமா கூட்டம் நடைபெற்றது. இதில் இஸ்லாம் குறித்தும் நடைமுறைகள் குறித்தும் பேசப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் தலைமை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் முகம்மது, இஸ்லாம் மார்க்கம் குறித்தும் பெண்களின் நிலை குறித்தும் தவ்கித் ஜமாத் செயல்பாடுகள் குறித்தும் பேசினார். அப்போது இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடிய மக்களின் மீது கொலை வெறி வெடிகுண்டு தாக்குதல் நடத்தி 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பண்டிகையின் போது அவர்களின் மகிழ்ச்சியை கெடுக்கும் விதமாக தீவிரவாத தாக்குதல் நடத்தியது யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இலங்கை அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்செயலுக்கு தமிழ்நாடு தவ்கித் ஜமாத் கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது என்றார். மார்க்கம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு கோவை ரஹ்மத்துல்லா பதில் கூறினார். முஸலிம் பெண்கள் மார்க்கத்தில் செய்த தொண்டினை அனிஸ் பாத்திமா ஆலிமா விளக்கினார். பிறப்பு இறப்பு குறித்து அப்ஷானா பேசினார். மாவட்ட செயலாளர் செய்து நெய்னா மற்றும் தொண்டி நகர் தலைவர் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

Tags : bomb blast ,Sri Lanka ,Takit Jamat ,
× RELATED நாகை – இலங்கை இடையே மே 19-ல் கப்பல் போக்குவரத்து தொடக்கம்